முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.100 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் 440 புதிய பேருந்துகள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் நேற்று , அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 100 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 18 புதிய சிற்றுந்துகள் உள்பட 440 புதிய பேருந்துகள், ஆகியவற்றை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.  ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தில் போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் விரிவடைந்து வருகின்றன. பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர்

ஜெயலலிதா தலைமையிலான அரசு, புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்தல், புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில்  23 வழித்தடங்களில் 50 மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான பேருந்துகள், 4 புதிய வழித்தடங்களில் 4 பேருந்துகள், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 202 பேருந்துகள், சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 78 பேருந்துகள், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 25 பேருந்துகள், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 63 பேருந்துகள், என 422 பேருந்துகளும் மற்றும் கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மலைப்பிரதேசங்களில் இயக்குவதற்கு ஏதுவாக 18 சிற்றுந்துகளும் (ளுஅயடட க்ஷரளநள) என மொத்தம்

100 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 440 புதிய பேருந்துகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில், தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர். பி. தங்கமணி, தலைமைச் செயலாளர். கு. ஞானதேசிகன் தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் த. பிரபாகர ராவ்,மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் பாலகிருஷ்ணசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்