முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் லஞ்சப்பணம் வாங்கிய விவகாரம் நிதிஷ்-லல்லு மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

ஜெகனாபாத்: ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அமைச்சர் ஒருவர் லஞ்சப் பணம் வாங்கும் வீடியோவை சுட்டி காட்டி அக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரை பிரதமர் மோடி கடுமையாக நேற்று விமர்சித்தார். பீகார் மாநிலத்தில் 5கட்டமாக சட்டசபைத்தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில் ஜெகனாபாத்தில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது  ஜெயப்பிரகாஷ் நாராயணனின் 113வதுபிறந்த நாளை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று  கொண்டாடினோம். அவரது அரசியல் வழியில் வந்தவர்கள் என்று சொல்பவர்கள் அவரது கொள்கைக்கு முரணாக நடக்கிறார்கள். முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த அமைச்சர் அவதேஷ் பிரசாத் குஷாவா லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதனால் அந்த அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். சமூக சீர் திருத்த வாதியான ஜெயபிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளை  கொண்டாடும் நேரத்தில் இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது.நாங்கள் ஜெயபிரகாஷ் காட்டிய வழியில்நடப்பவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அவரது பெயருக்கு களங்கங்கள் விளைவிக்கும் வகையில் இதுபோன்று செயல்படுகிறார்கள்.

பீகாரில் பாரதிய ஜனதா கட்சி ஒரு அங்கமாக ஆட்சியில் இருந்தபோது லஞ்ச விவகாரம் எதுவும் இடம் பெறவில்லை . ஆனால் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லல்லு பிரசாத்துடன் கைகோர்த்தவுடனேயே இது போன்ற விவகாரங்கள் நடக்க துவங்கியுள்ளன. தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் லல்லு பிரசாத் யாதவ் ஆவார். ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த அமைச்சர் ரூ4லட்சம் லஞ்சம் வாங்கி இருக்கிறார். அந்த பணத்தை  நீங்கள் தருவீர்களா?-  என்று மோடி கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்