முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் மாநில முதல் கட்ட தேர்தலில் 57 சதவீத வாக்குப்பதிவு

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா: பீகார் மாநிலத்தில் நேற்று நடந்த முதல் கட்ட தேர்தலில் 57சதவீதவாக்குகள் பதிவாகின.. முதல் கட்ட தேர்தலில் 49தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். பீகார் மாநிலத்தில் 5கட்டமாக சட்ட சபைத்தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர் தல் நேற்று 49தொகுகளுக்கு நடைபெற்றது.

5வது இறுதி கட்ட தேர்தல்  வருகிற நவம்பர் 5ம் தேதியன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் நிதிஷ்-லல்லு பிரசாத் யாதவ் தலைமையிலான மகா கூட்டணியும் மோதுகின்றன., பீகாரில் தற்போது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து கொண்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற்ற போது பாரதியஜனதா கட்சி அதிக அளவில் இடங்களை கைப்பற்றியது. அப்போது பிரதமர் மோடி தீவிரப்பிரச்சாரம் செய்திருந்தார். அதேப்போன்று தற்போதும் பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முதல் கட்ட தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 41தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. பாரதியஜனதா கட்சி 27இடங்களிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 17இடங்களிலும் லோக் ஜன் சக்தி கட்சி 13 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.

முதல் கட்ட தேர்தலில் நேற்று காலை 7மணி முதல் மாலை 5மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.. இதில் 57 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் எந்த வித வன்முறையும்இல்லாமல் அமைதியாக நடைபெற்றது. நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள 13தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள இதர 36தொகுதிகளில் தேர்தல் நடக்க வேண்டியிருக்கிறது.

பீகார் மாநில தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில்  பெண்களின் வாக்குகளே பிரதானமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 4வது  மிகப் பெரும் மாநிலமாக பீகார் இருக்கிறது. அந்த மாநிலத்தில் 5கோடியே 50லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக் கையில் 8சதவீதம் அந்த மாநிலத்தில் உள்ளது. நக்சல் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான ஜமுயி, பன்கா, லகிசராய் நவடா, மற்றும் முங்கர் ஆகிய இடங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.பீகார் மாநிலத்தில் தேர்தல் வன்முறை கள் ஏதும் நடக்காமல் இருக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 15அரசியல் தலைவர்களுக்கு விஐபி பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதில் 13பே பாஜ கவை சேர்ந்தவர்கள் அல்லது அதன் கூட்டணியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்