முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காபூலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பிரிட்டன் வீரர்கள் உள்பட 5 பேர் பலி

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு ராணுவஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரிட்டனின் இரு வீரர்கள் உள்பட நேட்டோ படைகளைச் சேர்ந்த 5வீரர்கள் பலியானார்கள். பிரிட்டன் படைகளுக்கு இது 2வது அடியாக அமைந்துள்ளது. தலிபான் தற்கொலைப்படையினர் காபூலில் பிரிட்டன் படையினரை குறி வைத்து தாக்கி வருகிறார்கள். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமையன்று காபூலில்உள்ள நேட்டோ தலைமையகத்தில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தீவிரவாத குழுவின் செயல்பாடு எதுவும் இல்லை என்று கூட்டு ராணுவ குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் விபத்தில் நேட்டோ படையைச் சேர்ந்த 5பேர் இறந்துள்ளனர்.5பேர் காயம் அடைந்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்கிற விவரம் எதுவும் உடனடியாக தெரிவிக்கப்பட வில்லை. இருப்பினும் இந்த விபத்தில் இரு பிரிட்டன் வீரர்கள் இறந்திருப்பதை லண்டனில் உள்ள பாதுகாப்புத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியது.இந்த விபத்து குறித்துவிசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இதுவரை 456 பிரிட்டன் வீரர்கள் இறந்துள்ளனர். கடந்த 2001ம்ஆண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்த்து தாக்குதலில் ஈடுபடத்துவங்கியது.இந்த தாக்குதலில் பிரிட்டனும் இணைந்துள்ளது. அப்போது முதல் இதுவரையில் 456 பிரிட்டன் வீரர்கள் அங்கு உயிரிழந்து இருக்கிறார்கள். ஹெலிகாப்டர் விபத்து நடப்பதற்கு சில மணி நேரம் முன்னதாக மத்திய காபூலில் பிரிட்டன் படைகளின் மீது தலிபான் தற்கொலை படை வீரர் காரில் வந்து தாக்கினார். இதில் 3பொது மக்கள் காயம் அடைந்தார்கள். இந்த தாக்குதலில் பிரிட்டனைச் சேர்ந்த எந்த வீரரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குண்டூஸ் பகுதியில் அமெரிக்கவீரர்கள் நடத்திய தாக்குதலுக்கு பழி வாங்கும் விதமாக நாங்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினோம் என்று தலிபான் தீவிரவாதிகள் தெரிவித்தனர். இந்த அக் டோபர் மாதம் 3ம் தேதியன்று அமெரிக்க படையினர் நடத்திய வான் வழி தாக்குதலில் குண்டூஸ் நகரில்உள்ள மருத்துவ மனையில் 12 ஊழியர்களும் 10 நோயாளிகளும் உயிரிழந்தார்கள். வான் வழி தாக்குதலில் தவறுதலாக பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா மன்னிப்பு கோரியதுடன் அதில் பலியானவர்களுக்கு நஷ்ட ஈடு தருவதாகவும் சேதமடைந்த மருத்துவமனையை சரி செய்து தருவதாகவும் தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்