முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்கு பொறுப்பேற்கும் தோனி

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2015      விளையாட்டு
Image Unavailable

கான்பூர்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கான்பூரில் வெற்றி பெறும் நிலையிலிருந்து இந்திய அணி தோல்வியடைந்ததற்கு தான் முழுப் பொறுப்பையும் ஏற்பதாக தெரிவித்துள்ள டோனி தன் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்காதது குறித்தும் வருந்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது.,

பின்னால் களமிறங்கும் போது தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டியது உள்ளது. ஏனெனில் நிறைய போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்திருக்கிறோம், இந்நிலையில் வெற்றிகரமாக முடிக்க முடியாத போட்டிகளை ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பர். ஒன்று இங்கிலாந்துக்கு எதிராக பிறகு இந்த ஆட்டம், மற்றொன்று சில ஆண்டுகளுக்கு முன்பாக இலங்கைக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டி.  தனிப்பட்ட முறையில் கூற வேண்டுமென்றால், 40-வது ஓவர் நெருங்கும் தறுவாயில் அதற்கு முன்னதான சில ஓவர்களில் ரன்கள் அவசியம். பெரிய ஷாட்களை ஆடியிருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை, ஆனால் இன்னும் கொஞ்சம் கூடுதல் ரன்களை அந்த ஓவரில் எடுத்திருக்க வேண்டும்.

அஸ்வினின் பந்து வீச்சை இழந்தது மிக முக்கியமானதாகும். அவர் காயமடைந்தார், அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் ஆட்டம் அப்போதுதான் சூடுபிடித்துக் கொண்டிருந்தது, நாங்கள் ரன்களை விட்டுக் கொடுக்காமல் வீசிக் கொண்டிருந்தோம். ஆனால் அதன் பிறகு ஸ்டூவர்ட் பின்னி, ரெய்னா ஆகியோர் ஓவர்களில் அதிகம் என்று கூற முடியாவிட்டாலும் ஓரளவுக்கு ரன்கள் எடுக்கப்பட்டது. பிறகு இறுதி ஓவர்கள் நன்றாகவே இல்லை.  இன்னிங்ஸை தொடங்கியது, ரோஹித், ரஹானே பார்ட்னர்ஷிப், சதம் அடித்த பிறகு ரோஹித் ஆடிய விதம், எல்லாம் பாசிட்டிவ்வாக பார்க்க வேண்டிய அம்சங்கள்.

பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் 30-35 ஓவர்கள் நன்றாக அமைந்தன. 35 ஓவர்களுக்கு அருகில் வரை நன்றாக பேட் செய்தோம். ஆனாலும் இன்னும் சில பகுதிகளில் உழைக்க வேண்டிய தேவை உள்ளது. கடைசியில் சுலபமான பணியாக அமையவில்லை. எப்போதும் ஷாட்கள் நமக்கு சாதகமாக அமையாது. அதுவும் பெரிய ஷாட்கள் ஆடும் போது எப்போதும் நமக்கு சாதகமாக இருக்காது. சில சமயங்களில் நல்ல பிட்சாக இருக்கும், பந்துகள் மட்டையை நோக்கி நன்றாக வரும், வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி அடித்து ஆடலாம், ஆனால் கான்பூர் விக்கெட்டில் சராசரி பவுன்ஸ் என்பது தாழ்வாக இருந்தது. பந்துகள் பவுன்ஸ் ஆகவில்லை.

பந்துவீச்சு இறுதி ஓவர்களில் சரியாக அமையாதது ஏமாற்றமளிக்கிறது. ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. 2 ஒவர்களில் 40 ரன்கள் பக்கம் வந்தது. இது மிகப்பெரிய ரன்கள், இது எந்த வடிவமாக இருந்தாலும் சரி. ஆனால் பேட்டிங் நன்றாகவே உள்ளது, ரஹானே 3-ம் நிலை, பிறகு விராட் கோலி, பிறகு நான், ரெய்னா, பின்னி, இது ஒரு செட்டில் ஆன வரிசையாகவே எனக்குப் படுகிறது. அனுபவமும், ஆற்றலும் உள்ள இந்த வரிசை பெரிய இலக்குகளை விரட்ட முடியும் என்றே நான் கருதுகிறேன். ரஹானே 3-ம் நிலையில் இறங்குவது பலம் கூட்டியுள்ளது என்றார் தோனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்