முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். தலைவர் நூல் வெளியீட்டுக்கு எதிர்ப்பு: ஒருங்கிணைப்பாளர் மீது சிவசேனா கருப்பு மை வீச்சு

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

மும்பை, பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான குர்ஷி முகமது கசூரியின் புத்தகத்தை வெளியிட ஏற்பாடுகளை செய்த ஒருங்கிணைப்பாளர் சுதீந்திரா குல்கர்னியின் மீது மும்பையில் கருப்பு மை வீசப்பட்டது.

சிவசேனா கட்சியினர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து தாக்குதலுக்குள்ளான அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதீந்திரா குல்கர்னி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார்.  அப்போது அவர் கூறும்போது,

காலை நான் என் வீட்டிலிருந்து கிளம்பும்போது சிவசேனா கட்சியைச் சேர்ந்த சிலர் சுற்றிவளைத்தனர். என்னை தேச துரோகி என்று அழைத்து அவதூறு பேசினர். பின்னர் கருப்பு மையை என் மீது ஊற்றி என்னைப் பற்றி மிகவும் தரக்குறைவாக பேசினர் என்றார். அவர் மேலும் கூறும்போது, இந்தியா - பாகிஸ்தான் உறவை மேம்படுத்தவே இந்தப் புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சிவசேனாவின் அச்சுறுத்தலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். அவர்களால் நாட்டுக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தித் தரவில்லை.

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. எங்களுக்கும் தேசபக்தி இருக்கிறது. அதற்காக இந்தியா - பாகிஸ்தான் மக்கள் ஒருவொருக்கொருவர் சந்திக்ககூடாது என்பதில்லை என கூறினார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த குல்கர்னி,

மும்பை வோர்லியில் திட்டமிட்டபடி புத்தக வெளியீட்டு விழா நடைபெறும். உத்தவ் தாக்கரேவை சந்தித்து நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளேன். என்றார். பாஜக மூத்த தலைவர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோருக்கு மேடைப்பேச்சு எழுத்தாளராக குல்கர்னி பணியாற்றி இருந்தார் என்பது குல்கர்னி
இச்சம்பவம் குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறும்போது, குல்கர்னி மீது மை வீசப்பட்டதா? தார் வீசப்பட்டதா என்பது எனக்குத் தெரியாது? பொதுமக்கள் கோபம் எப்படி வெடிக்கும் என்பதையும் கூறமுடியாது. இருப்பினும் மை வீசி தாக்குதல் நடத்துவது என்பது மிதமான போராட்டமே. ஜனநாயக நெறியிலான போராட்டமே. எங்கள் எதிர்ப்பையும் மீறி புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றால் நிகழ்ச்சி நடைபெறும் அரங்குக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும் என்றார்.

இந்நிலையில் சிவ சேனா செய்கைக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்செயலை யார் செய்திருந்தாலும் அவர்களுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த சில நாட்களாக, ஒரு தனி மனித கருத்தையோ அல்லது தனி நபரையோ சகித்துக்கொள்ள முடியாவிட்டால் வன்முறையை கடைபிடிக்கும் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதை, தேசம் மிகக் கவனமாக கையாள வேண்டும்.  ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மை மிகவும் அவசியமானது. ஜனநாயகத்தில், மாற்றுக் கருத்தை தெரிவிக்கவும் இடம் அளிக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்