முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தின் புதிய பிரதமராக கட்க பிரசாத் சர்மா தேர்வு

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

காட்மாண்டு நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கட்க பிரசாத் சர்மா ஒளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


நேபாளத்தில் புதிய அரசியலமைப்பு சட்டத்தை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரு கிறது. இதில் அனைத்துக் கட்சி தரப்பில் ஒருமித்த உடன்பாட்டை ஏற்படுத்த முடியாததை அடுத்து, பிரதமர் சுஷீல் கொய்ராலா ராஜினாமா செய்தார். 

இதையடுத்து புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒளியை நாடாளுமன்றம் தேர்வு செய்தது.
பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட நாடாளுமன்றத்தின் மொத்த வாக்குகளில் 299 வாக்குகள் பெற வேண்டும். 587 உறுப்பினர்கள் வாக்களித்ததில் சர்மா ஒளி 338 வாக்குகள் பெற்று பிரதமராகத் தேர்வானார். நடப்பு பிரதமர் கொய்ராலாவுக்கு 249 வாக்குகளே கிடைத்தன. யுசிபிஎன் மாவோயிஸ்ட், நேபாள ராஷ்ட்ரீய பிரஜாதந்திரா கட்சி, ஜனநாயக மாதேஸி ஜன அதிகார் கூட்டமைப்பு மற்றும் சில உதிரிக் கட்சிகள் சர்மா ஒளிக்கு ஆதரவளித்துள்ளன.

மன்மோகன் அதிகாரி பிரதமராக இருந்தபோது கடந்த 1994-ம் ஆண்டு சர்மா ஒளி உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 1991, 94, 99-ம் ஆண்டுகளில் ஜாபா மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்