முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட்டில் அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர்: மியான்தத் சாதனையை முறியடித்த யூனிஸ்கான்!

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2015      விளையாட்டு
Image Unavailable

அபுதாபி - பாகிஸ்தான் வீரர்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை யூனிஸ்கான் படைத்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக டெஸ்ட் ரன்களைக் குவித்த சாதனையை வைத்திருந்த ஜாவேத் மியான்தத் தற்போது அந்த பெருமையை இழந்துள்ளார். கடந்த 22 வருடங்களாக மியான்தத்தான் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக ரன்களைக் குவித்த வீரராக திகழ்ந்தார். தற்போது அந்த சாதனையை யூனிஸ்கான் முறியடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று இந்த சாதனையை நிகழ்த்தினார் யூனிஸ்கான். அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயேத் ஸ்டேடியத்தில் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. தனது சாதனையை சிக்ஸரின் மூலம் யூனிஸ்கான் நிறைவேற்றியபோது அரங்கில் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் எழுந்து நின்று யூனிஸ்கானுக்கு மரியாதை செலுத்தி பாராட்டி மகிழ்ந்தனர்.

இந்த டெஸ்ட் போட்டிக்கு வருவதற்கு முன்பு மியான்தத் சாதனையை முறியடிக்க 19 ரன்கள் மட்டுமே யூனிஸ்கானுக்குத் தேவைப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தனது சாதனையை 102வது டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தியுள்ளார் யூனிஸ்கான். சாதனைக்கு முன்பாக 15 ரன்களில் இருந்த அவர் சிக்ஸர் அடித்து 21 ரன்களை எடுத்து சாதனை படைத்தார். கடந்த 22 வருடமாக மியான்த்தின் சாதனையை எந்த பாகிஸ்தான் வீரரும் முறியடிக்க முடியாமல் இருந்தது.

தற்போது அதை சாதித்துள்ளார் யூனிஸ்கான். மியான்தத் 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8832 ரன்களைக் குவித்து சாதனை படைத்திருந்தார். அதை தற்போது முறியடித்துள்ளார் யூனிஸ்கான். அவர் தற்போது 8836 ரன்களைக் குவித்துள்ளார். ஏற்கனவே யூனிஸ்கான் ஒரு சாதனையை வைத்துள்ளார். அதிக டெஸ்ட் சதங்களைப் போட்டுள்ள பாகிஸ்தான் வீரர் அவர்தான். 30 சதங்களை அவர் போட்டுள்ளார். யூனிஸ்கானின் சாதனையை இப்போதைக்கு முறியடிக்கக் கூடிய நிலையில் எந்த பாகிஸ்தான் வீரரும் இல்லை என்பதால் இவரது சாதனையும் நீண்ட காலம் முறியடிக்கப்படாமல் இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்