முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் முதன்மைத்தேர்வுக்கு பயிற்சி 15 ம் தேதி வரை விண்ணப்பம்

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: 2015 ஆம் ஆண்டுக்கான மத்திய தேர்வாணனை முதன்மை தேர்வு பயிற்சிக்கான மாணவர் சேர்க்கைக்கு 15ம்தேதி வரை விண்ணப்பங்களை வழங்கலாம் என்று மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு.

மத்திய தேர்வாணைக்குழுவின் 2015 ஆம் ஆண்டிற்கான முதன்மைத்தேர்வுபயிற்சிக்காக மாணவ/மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவங்கள் 13.ம்தேதி 15.ம்தேதி வரை சென்னை –28, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, காஞ்சி வளாகம், எண்:163/1–ல் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப்பணித்தேர்வு பயிற்சி மையத்தில்வழங்கப்படும். மாணவ/மாணவியர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களைபெற்று அதன் அடிப்படையில் 16.ம்தேதி முதல் 17.ம்தேதி வரை சேர்க்கை நடைபெறும். முதன்மை தேர்வுக்கான பயிற்சிக்கு என மொத்தம் 225 மாணவ/மாணவியர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இப்பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர தமிழ் நாட்டைச் சேர்ந்த இதர பயிற்சிமையத்தில் பயின்ற மாணவ/மாணவியர்களும், எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் தனியேதேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.முதன்மைத் தேர்வுகள் தொடங்கும் வரை பயிற்சியளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில்கட்டணமில்லா விடுதி மற்றும் உணவு வழங்கப்படும் மேலும் இப்பயிற்சிக் காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.3000/- உதவித் தொகை தமிழக அரசால் மாணவ/ மாணவியர்களுக்கு வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி முதல்வர், அகிலஇந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், சென்னை – 28. தொலைபேசி எண் 044-24621475 இணையதள முகவரிwww. Civilservicecoaching.com இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்