முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர புதிய தலைநகர் அடிக்கல் நாட்டு விழா: 29 மாநில முதல்வர்களுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

நகரி: ஆந்திர புதிய தலைநகருக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொள்ளுமாறு 29 மாநில முதல்வர்களுக்கு சந்திரபாபு நாயுடு அழைக்கவுள்ளார். ஆந்திர மாநில புதிய தலைநகர் அமராவதிக் கான அடிக்கல் நாட்டு விழா குண்டூர் அருகே வருகிற 22ம் தேதி நடக்கிறது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி புதிய தலைநகருக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழாவில், சீனா, சிங்கப்பூர், ஜப்பான் தலைவர்கள் உள்பட 2.5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

விழாவில் பங்கேற்கும் படி 29 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவுள்ளது. மாநில கவர்னர், முதல்வர், எதிர்கட்சி தலைவர், சட்டசபை சபாநாயகர், மேல்சபை சபாநாயகர், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி என ஒவ்வொரு மாநிலத்துக்கும் 6 பேருக்கு அழைப்பு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ஐதராபாத் ஐகோர்ட்டு நீதிபதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஐபிக்கள் வரவழைக்கப்படவுள்ளனர்.

இவர்கள் தங்க ஐதராபாத், விசாகப்படினம், விஜயவாடாவில் நட்சத்திர ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திராவின் அனைத்து கிராம மண், தண்ணீர் சேகரித்து கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப் படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்ய அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்த கிராமமான சித்தூர் மாவட்டம் நாராவாரி பள்ளியில் மண் சேகரிக்கிறார். இதற்காக அவர் நேற்று சொந்த ஊர் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago