முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவுடன் 2-வது ஒரு நாள் போட்டி: வெற்றி பெரும் நெருக்கடியில் கேப்டன் டோனி

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2015      விளையாட்டு
Image Unavailable

இந்தூர்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதவுள்ள 2-வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது. இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி டி20 போட்டியில் 2-0 என்ற முறையில் தொடரை கைப்பற்றியது. 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் நடக்கிறது.

இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானம் இந்திய அணிக்கு ராசியான மைதானமாகும். இங்கு இந்தியா தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்த மைதானத்தில் இந்தியா 3 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளது. மூன்று போட்டிகளிலுமே இந்தியாதான் வென்றுள்ளது. இங்குள்ள பிட்ச் பிளாட்டானது. ஒரு புல்லைக் கூட இங்கு காண முடியாது. அப்படி ஒரு பிட்ச் இது. 27,000 பேர் அமரக் கூடிய வகையிலானது இந்த ஸ்டேடியம். பிட்ச் எந்த வகையான பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும், பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்குமா என்று கியூரேட்டர் சம்ந்தர் சிங் செளகானிடம் கேட்டபோது, அது சஸ்பென்ஸ். நல்லதொரு கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்கக் கூடிய வகையில் பிட்ச் இருக்கும் என்று மட்டும் தெரிவித்தார்.

இந்த மைதானத்தில் 4 வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. கடைசியாக நடந்த ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் வீரேந்திர ஷேவாக் அதிரடியாக விளையாடி 219 ரன்களைக் குவித்தார். இந்தப் போட்டியில் 153 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அதற்கு முன்பு 2006ல் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்திலும், 2008ல் இங்கிலாந்துக்கு எதிராக இன்னொரு போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வென்றுள்ளது. 4-வது முறையாக இன்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. தென் ஆப்பிரிக்க அணி நல்ல பார்மில் உள்ளதால் இந்திய அணிக்கு தொடர்ந்து நெருக்கடி உருவாகி வருகிறது. இந்திய அணி கேப்டன் தோனி வெற்றி பெற வேண்டிய அவசியத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago