முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்முகதன்மை-சகிப்பு தன்மை குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை குறித்து பாகிஸ்தான் விளக்க உரை நிகழ்த்த வேண்டாம் என்று அந்த நாட்டிற்கு இந்தியா பதிலடி தந்தது. இந்தியாவில் பாகிஸ்தான்  கஜல் இசைக்கலைஞர் குலாம் அலி இசை நிகழ்ச்சியும், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் கசூரி பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் இடையூறுகள் ஏற்பட்டன.  இது குறித்து பாகிஸ்தான் கூறுகையில் இந்தியாவில் பன்முக கலாச்சார தன்மை, சகிப்புத்தன்மை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய து.

இந்த கருத்துக்கு இந்தியா தரப்பில் இருந்து பதிலடி தரப்பட்டது. பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை குறித்து பாகிஸ்தான் விளக்க உரை நிகழ்த்த வேண்டியது இல்லை.யுபா(ரஷ்யா)ஒப்பந்தப்படி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதத்துடன் துணை போகக்கூடாது.பிஎஸ்,எப் படை வீரர்கள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகள் இடையே நல்லுறவு நீடிப்பதற்கு தீவிரவாதம் பிரதான மாக இருக்கக்கூடாது. மற்றவர்களை நிர்பந்திப்பதற்காக ஒரு நாடு தீவிரவாதத்தை கையாளக்கூடாது என்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக் கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் தலைவர்கள் இந்தியா வரும் போது காஷ்மீர் பிரிவினை வாதத்தலைவர்களுடன் சந்தித்து பேச்சு நடத்துகிறார்கள். இந்திய தலைவர்களுடன் பேச வரும் போது பிரிவினை வாத தலைவர்களை சந்திப்பது சரியல்ல. என்றும் இந்தியா கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்