முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ30 க்கு கீழே குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லாசல்கான் மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ30க்கு கீழே குறைந்தது.  இந்தியாவின் பெரும் வெங்காய சந்தையாக மகாராஷ்டிராவில் உள்ள லாசல்கான் பகுதி உள்ளது. அந்த மொத்த விற்பனை சந்தையில் வெங்காயம் கிலோவுக்கு ரூ28.50க்கு என விற்பனை ஆகிறது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ57க்கு விற்பனை யானது. தற்போது அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் நுகர்வோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெங்காய உற்பத்தி தற்போது அதிக அளவில் உள்ளது. இதனால் வரவிருக்கும் மாதங்களில் வெங்காய விலை மேலும் குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா,ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் வெங்காயம் பயிரிடப்படுகிறது. காரிப் சீசனில் அங்கு வெங்காயம் அதிக அளவில் இருப்பதால் வெங்காய விலை மேலும் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.வரவிருக்கும் மாதங்களில் லாசல்கான் சந்தையில் ஒரு கிலோவெங்காயம் ரூ 20-30என்ற நிலையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.வெங்காய விலையை கட்டுப்படுத்துவதற்காக அரசு சார்பில் 2ஆயிரம் டன் வெங்காயம் சீனாவில் இருந்தும் எகிப்தில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

வெங்காய இறக்குமதியை மேற் கொண்ட அரசு வெங்காய ஏற்றுமதிக்கான விலையையும் அதிகரித்தது. இதனால் இந்தியாவில் இருந்து அதிக அளவில் வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல் தடுக்கப்பட்டது. கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் தற்போது வெங்காய அறுவடை தீவிரமாக உள்ளது. மகாராஷ்டிராவில் தற்போதுதான் வெங்காயம் அறுவடை துவங்கி இருக்கிறது. மகாராஷ்டிராவில் போதிய மழை இல்லாததால் வெங்காய அறுவடை குறைவாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. 2014-15 பயிர் ஆண்டில்(ஜூலை- ஜூன்மாதம்) இந்தியாவில் 1கோடியே 87லட்சம் டன் வெங்காயம் உற்பத்தியானது. அதற்கு முந்தய ஆண்டில் வெங்காய உற்பத்தி 1கோடியே 94லட்சம்டன் வெங்காயம் உற்பத்தி ஆகி இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்