முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பஞ்சலோக 18-ம் படிக்கு சிறப்பு பூஜை: இன்று நடைதிறப்பு

புதன்கிழமை, 14 அக்டோபர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அவர்கள் கோவிலின் 18ம் படி ஏறி சாமி தரிசனம் செய்வார்கள். இக்கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு திருவிழாக்கள் பிரசித்திப் பெற்றவையாகும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு 18ம் படி ஏறி சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமானோர் ஏறிச் சென்ற தால் இந்த படிகள் பழுதடைந்து காணப்பட்டது.
இதனை சீரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, வருகிற மண்டல பூஜை விழாவுக்கு முன்பு பிடிகள் சீரமைக்கும் பணி நடந்தது. ஏற்கெனவே பதிக்கப்பட்ட தகடுகள் அகற்றப்பட்டு புதிதாக பஞ்சலோக தகடுகள் பொருத்தப்பட்டன. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது. இதை தொடர்ந்து 18ம் படியில் சிறப்பு பூஜைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்றஉ மாலை திறக்கப்படுகிறது.

மறுநாள் காலை 11 மணிக்கு புதிதாக பஞ்சலோக தகடுகள் பதித்த 18ம் படிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதன்பிறகு பக்தர்கள் 18ம் படிவழியாக சென்று சுவாமி அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். அன்று 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இதைதொடர்ந்து வருகிற 17ம் தேதி மாலை 5 மஎணிக்கு ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் மீண்டும் திறக்கப்படுகிறது. மறுநாளில் இருந்து சுவாமி அய்யப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். மேலும் 18ம் தேதி சபரிமலை கோவில் புதிய மேல்சாந்தியும் தேர்வு செய்யப்படுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்