முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்

வியாழக்கிழமை, 15 அக்டோபர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடங்கியது.  புதனன்று துவங்கிய நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் காலையில் தங்க திருச்சி வாகனத்தில் உற்சவரான மலையப்ப சுவாமி, தேவி, பூதேவி சமேதமாக 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகன சேவையின் முன்பு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் நாட்டியமாடியபடி சென்றனர்.  இரவில் வேத பண்டிதர்கள் புடைசூழ, உற்சவ மூர்த்திகள் பெரிய சேஷ வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.

வாகன சேவையின் போது யானை, குதிரை, காளை போன்ற பரிவட்டங்கள் முன்னால் செல்ல, இவைகளை தொடர்ந்து பல மாநில நடனக் கலைஞர்கள் நடனமாடியபடி மாட வீதிகளில் சென்றனர்.  நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி, வண்ண விளக்கு அலங்காரம், அலங்கார வளைவு கள், தோரணங்கள், வண்ண மலர் அலங்காரம் என திருமலையில் எங்கு பார்த்தாலும் விழா கோலம் பூண்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளதாக தேவஸ் தான இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜூ தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்