முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்பு பதவிக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள்: ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, முதல் – அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:–

அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின் இன்று (17–ந்தேதி) நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர், மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர்–நீலாபுரம் எம்.செல்வம் (பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்றத் தொகுதி செயலாளர்)திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் மண்டலக் குழுத் தலைவர்– கிருஷ்ண மூர்த்தி (திருச்சி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்– பி.கோபி (ஊராட்சி ஒன்றியக் குழு 13–வது வார்டு உறுப்பினர்). திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்– பி.ராஜ சேகர் (ஊராட்சி ஒன்றியக் குழுதுணைத் தலைவர்)புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்–பி.வெள்ளையம்மாள் (பணியான்பட்டி, திருமலை ராயசமுத்திரம்)அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர் – சுப்பிரமணியன் (ஒன்றிய அவைத் தலைவர்)தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர்– கண்ணுசாமி (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்)திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்– சரவணன் (பேரூராட்சி மன்ற 11–வது வார்டு உறுப்பினர்). இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்