முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரெயில்கள்: தீபாவளியை முன்னிட்டு ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்மிக சுற்றுலா ரெயில்களை இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) இயக்க திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி. கூடுதல் பொது மேலாளர் எல்.ரவிக்குமார் கூறியதாவது:–

இந்தியன் ரெயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணைந்து பாரத தரிசன சுற்றுலா ரெயில் திட்டத்தை கடந்த 2005–ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்றன.தீபாவளியை முன்னிட்டு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. வருகிற 30–ந்தேதி மதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சென்னை சென்ட்ரல் வழியாக ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயத்துக்கு இயக்கப்படுகிறது. மொத்தம் 7 நாட்கள் இந்த ஆன்மிக சுற்றுலாவிற்கு ஒருவருக்கு ரூ.5800 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே போல நவம்பர் 6–ந்தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வழியாக கங்கா, காசி, கயா, அயோத்தியா, டெல்லி, ஆக்ரா, மதுராவுக்கு இயக்கப்படுகிறது. 12 நாட்கள் கொண்ட இந்த பயணத்திற்கு ஒருவருக்கு ரூ.9940 கட்டணம்.

மேலும் நவம்பர் 21–ந்தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், ஈரோடு, பெங்களூர், சென்னை சென்ட்ரல் வழியாக துவாரகா, பேட் துவாரகா, டாக்கோர் உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்படுகிறது.10 நாட்கள் கொண்ட இந்த யாத்திரைக்கு ஒரு நபருக்கு ரூ.8280 கட்டணமாகும்.கட்டணத்தில் ரெயில் கட்டணம், சைவ உணவு, தங்குவதற்கு ஹால், சுற்றி பார்க்கும் வாகன வசதி உள்ளிட்டவை அடங்கும்.இது தொடர்பாக தகவல் பெற சென்ட்ரல் ரெயில் நிலையம் 044–64594959, 9003140680, காட்பாடி–98409 48484, மதுரை–90031 40714, கோவை –9003140655 ஆகிய எண்களில் பேசலாம்.இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்