முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்க தேர்தல் இன்று வாக்குப்பதிவு: சரத் - விஷால் வெற்றி யாருக்கு?

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை: நடிகர் சங்கத்தேர்தல் வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் வெற்றி பெறுவது சரத்தா- விஷாலா என்று இன்று இரவு 8 மணிக்கு தெரியும். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இதுவரை இல்லாத அளவிற்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. சரத்குமார் தலைமையிலான அணியும், நடிகர் விஷால் தலைமையிலான அணியும் மோதுகிறது.இரு அணியை சேர்ந்தவர்களும் வெளியூர்களில் சுற்றுப்பயணம் செய்து நாடக நடிகர்களிடம் தீவிர ஓட்டு வேட்டையாடினார்கள். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சென்னையில் உள்ள வாக்காளர்களை ஈர்ப்பதற்கு இரு அணியினரும் முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக இரு அணியை சேர்ந்தவர்களும் தங்களது ஆதரவாளர்களின் போட்டி கூட்டங்களை நடத்தினார்கள்.

இரு தரப்பிலும் சினிமாவை மிஞ்சும் போட்டாபோட்டி பிரசாரங்கள் நடைபெற்றன. . இன்னும் 24 மணி நேரங்களே உள்ள நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் சென்னை மயிலாப்பூர் செயின்ட் எபாஸ் மகளிர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.நடிகர்களுக்கு தனியாகவும், நடிகைகளுக்கு தனியாகவும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3 ஆயிரத்து 139 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 960 வாக்குகள் தபால் ஓட்டுகள் மூலம் போடப்பட்டுள்ளன. ஏராளமான நாடக நடிகர்கள் நேரில் வந்து ஓட்டு போட இருக்கிறார்கள்.

வாக்குப்பதிவு நடைபெறும் அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுப்போட வரும் நடிகரோ, நடிகையோ துணைக்கு வேறு எவரையும் அழைத்து வரக்கூடாது. டிரைவர் மட்டும் வாகனத்தை ஓட்டி வரலாம். பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்தல் ஏற்பாடுகளை நீதிபதி பத்மநாபன் நேற்று காலை பார்வையிட்டார்.இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பின்னர் வாக்குகள் அனைத்தும் ஒன்றாக போட்டு கலக்கப்படும். அதன் பின் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும். இரவு 8 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago