முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்ச்சைக்குரிய நடிகர் சங்க கட்டிட ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக சரத்குமார் தகவல்

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை: நடிகர் சங்கத்தில் சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்த கட்டிட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாக நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார். மேலும் நடிகர் சங்கத்தின் வரவு செலவு கணக்கை இன்னும் பத்து நாட்களில் புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்,

நடிகர் சங்கத்தேர்தலில் நடிகர் சரத்குமார் தனது தலைமையில் அணி அமைத்து போட்டியிட்டார். இந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சரத்குமார் உள்ளிட்ட 25 பேர் படுதோல்வியை தழுவினர். இந்த நிலையில் தன்னை பற்றி விஷால் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரான சரத்குமார் பதிலளித்து சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் நடிகர் சங்கத்தலைவராக பொறுப்பேற்ற போது 4 -25 கோடி கடனில் சிக்கி தவித்தது. பல கலைநிகழ்ச்சிகளை நடத்தி சங்கத்தின் இருப்புதொகையை இரண்டு கோடியாக்கினோம். இப்படி சேர்க்கப்பட்ட பணத்தில்தான் மூத்தஉறுப்பினர்களின் ஓய்வூதியம், மற்றும் மருத்துவச்செலவுகள் கலைஞர்களின்குழந்தைகளின் படிப்பு செலவு ஆகியவற்றை செய்து வந்தோம். நான் பொறுப்பில்இருந்தவரையிலான வரவு செலவுகளை கணக்குகளை முறையாக கணக்கிட்டுபத்து நாட்களுக்குள் நாசரிடம் ஒப்படைப்பேன். மீண்டும் நடிகர் சங்கம் கடனில் மூழ்கி விடக்கூடாது என்பது தான் என் எண்ணம்

நடிகர் சங்கத்தின் பணியாற்றும் உறுப்பினர்களின் நலனுக்காக பல பொதுக்குழுக்கள் போட்டு யாரும் எட்டிப்பார்க்கக்கூடவில்லை .இந்த நிலையில் என்னென்ன செய்யலாம் என்று சிறப்பு பொதுக்குழு நடத்தி எஸ்.பி. ஐ சினிமாவுடன் ஒப்பந்தம் போட்டேன். அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்என்கிறார்கள் அந்த ஒப்பந்தம் போல மிகச்சிறந்த ஒப்பந்தம் எதுவுமில்லை. அந்த . ஒப்பந்தத்தில் உள்ள குறை எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் அதை ரத்து செய்யவேண்டும் என்று அழுத்திச் சொல்கிறார்கள். இதில் நான் ஏதோ முறைகேடு செய்து விட்டதாக ஆதாரம் இல்லாமல் என்னை சேதாரப்படுத்த முயற்சிக்கிறார்கள்.. நான்எஸ்.பி.ஐ சினிமாவின்கிரண்ரெட்டியிடம் சென்று என்னை பற்றி அவதூறு கிளப்புகிறார்கள் இந்த ஒப்பந்தத்தைரத்து செய்தால் என்னவென்று அவரிடம் கேட்டேன். எனக்காக பரிதாபப்பட்டஅவர்களும் ரத்து செய்து விடலாம் என்று சொல்லி கடந்த செப்டம்பர் மாதம்29ம் தேதியே நடிகர் சங்க இடத்தில் புதிய கட்டிடம் கட்ட போடப்பட்டஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டேன். இதை தேர்தலுக்குமுன்னே காட்டியிருந்தால் என் மீதான அவதூறுகள் இன்னும் அதிகரித்திருக்கும் என் மீது சுமத்தப்பட்டிருக்கும் களங்கத்தை துடைக்க வேறு வழி தெரியவில்லை.

நான் பொதுவாழ்க்கையில் 33 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். . நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன்., மாநிலங்களவை உறுப்பினராக இருந்திருக்கிறேன். இப்போது கட்சியின் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறேன். . என் மீது ஆதாரமற்ற முறையில் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது அவதூறுகள் தூவப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தேன். இது போன்ற அவதூறுகள் என்னை நிலைக்குலைய செய்து விட்டன. என்று கண்ணீர் விட்டார். நாசரும் விஷாலும் எப்போது வந்தாலும் ஆலோசனைகள் கூற தயாராக இருக்கிறேன். இன்னொரு முறை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அவர் ஆவேசமாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்