முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசியில் ஆன்லைன் பட்டாசு விற்பனை ரூ.100 கோடியை தாண்டியது

வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2015      வர்த்தகம்
Image Unavailable

சிவகாசி - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் ஆன்-லைன் பட்டாசு விற்பனை இந்த ஆண்டு ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. நவம்பர் 10-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு விற்பனை தீவிரமடைந்துள்ளது. மொத்த மற்றும் சில்லரை விற் பனையைத் தவிர கடந்த 3 ஆண்டு களாக சிவகாசியில் ஆன்-லைன் மூலமாகவும் பட்டாசு விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரபல பட்டாசு நிறுவனங்கள் தவிர நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங்களும் ஆன்-லைனில் பட்டாசுகளை விற்பனை செய்து வருகிறது. இதனால், கடந்த 2 ஆண்டுகளைவிட சிவகாசியில் இந்த ஆண்டு ஆன்-லைன் மூலம் பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளைவிட இந்த ஆண்டு ஆன்-லைன் மூலமாக பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது.

பிரபல நிறுவனங்களுக்கு ஈடாக ஏராளமான சிறு நிறுவனங்களும் ஆன்-லைன் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு ஆன்-லைன் மூலம் பட்டாசு விற்பனை ரூ100 கோடியைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago