முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனப்பட்டாசுகளை பறிமுதல் செய்ய வலியுறுத்தி போராட்டம்: சரத்குமார்

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, வட மாநிலங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீனப்பட்டாசுகளை பறிமுதல் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி நாளை மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை

இந்தியாவில் ஆண்டுதோறும் 4000 கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 3500 கோடி ரூபாய் பட்டாசுகள் சிவகாசி பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏறத்தாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் பட்டாசுத் தொழிலில் தமிழகத்தில் 5 லட்சம் பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். சீனப் பட்டாசுகளின் வரவு மக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதுடன், நம் நாட்டின், தமிழகத்தின் சிறு தொழில் வீழ்ச்சிக்கும், பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை, வருவாயை இழக்கும் சூழ்நிலையையும்

மக்களுக்கும், தமிழ்நாட்டின் தொழில், வேலைவாய்ப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் சீனப்பட்டாசுகளை அனைவரும் புறக்கணிக்க வேண்டும். சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டுள்ள சீனப்பட்டாசுகள் நாட்டின் எந்த ஒரு இடத்திலும் விற்பனை செய்யாத வகையில் மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தமிழக அரசு, பட்டாசு சில்லறை விற்பனையாளர்களுக்கு லைசென்ஸ் கொடுக்கும்போது சீனப்பட்டாசு விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையோடு அனுமதி வழங்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். அதே வேளை பொது மக்களும் பட்டாசு வாங்கும் போது

சீனத் தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும். மேலும் சீனப்பட்டாசு விற்பது குறித்து தெரிய வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.சீனப்பட்டாசுகள் வட இந்தியாவில் அதிகம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே சீன பட்டாசுகள் விற்கும் முயற்சியை மத்திய அரசு நாடு முழுவதும் தடுத்து நிறுத்திட கோரியும், சீனப்பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்யக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி மதுரையில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் 26ந்தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். பொதுமக்களும் மக்கள் நலன் கருதி இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கைடயில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்