முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜிதன் ராம் மன்ஜியை முதல்வராக்க வாய்ப்பு இல்லை: பா.ஜ.க

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தலித் தலைவர் ஜிதன் ராம் மன்ஜி முதலமைச்சராக ஆவதற்கு எந்த வித அறிகுறிகளும் இல்லை. இது குறித்து கூட்டணி கட்சிகளிடம் பாஜ க கட்சி எந்த வித கருத்தும் தெரிவிக்க வில்லை என்று பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார். பீகார் மாநிலத்தில்  உள்ள 243 சட்ட மன்ற தொகுதிகளுக்கு 5கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் இது வரை நடந்த வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர். முந்தைய தேர்தலை விட இந்த சட்டமன்ற தேர்தலில்  அதிக அளவில் வாக்குப்பதிவு ஆகியுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவின் என்டி ஏ கூட்டணி போட்டியிடுகிறது. அதேப்போன்று பாரதிய ஜனதா கூட்டணியை எதிர்த்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் , லல்லுபிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் , மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றை கொண்ட மகா கூட்டணி போட்டியிடுகிறது.

 கடந்த ஆண்டு பீகார் மாநிலத்தில் மக்களவைத்தேர்தல் நடைபெற்ற போது பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை பெற்று இருந்தது. பிரதமர்மோடியின் தீவிர பிரச்சாரத்தால் பாஜக அமோக வெற்றி பெற்றது என கூறபட்டது. அதேப் போன்று இந்த சட்ட சபைத்தேர்தலிலும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறது. அதற்காக பிரதமர் நரேந்திர மோடி அதிக அளவிலான பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.அவரது கூட்டங்களுக்கு மக்கள் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள்.

பாஜக கட்சி இட ஒதுக்கீடுக்கு எதிரான கட்சி அல்ல என்று பிரச்சாரத்தில்மோடி வலியுறுத்தி வருகிறார். பீகார் தேர்தல் குறித்து பாஜக தற்போது தனது கருத்தை தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவரான அமித் ஷா தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அமித் ஷா அளித்த பதில்களும் வருமாறு,  பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தலித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மன்ஜி முதல்வராக ஆக்கப்படுவாரா?- என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா கூறுகையில், ஜிதன் ராம் தனது கட்சி சார்பில் பேசுவதற்கு உரிமை உள்ளது. பாஜகவை பொருத்த வரை பீகார் மாநிலத்தில் யார் முதல்வர் என்பது குறித்து எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்க வில்லைஎன தெரிவித்தார். பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மன்ஜி ஆவார்.அவர்இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா(மதச்சார்பின்மை) தலைவர்ஆவார். ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் தன்னை முதல்வராக ஆக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்என்று ஜிதன் ராம் மன்ஜி தெரிவித்தார்.

இது குறித்து அமித் ஷாவிடம் கேட்கப்பட்ட போது பீகார் தேர்தலில் வெற்றி  பெற்றால் இவரைத்தான் முதல்வராக ஆக்குவோம் என்று என யாரையும் பாஜக குறிப்பிட்டு கூறவில்லை என தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி மணமகன் இல்லாத திருமண கோஷ்டி மாதிரி உள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா  பல்வேறு தேர்தல்களில் பாஜக கூட்டு முயற்சியாகதான் போட்டியிட்டு வந்துள்ளது.தேர்தல் முடிவுகள் வெளி வந்த பின்னர்தான் தனது கட்சி தலைவரை பாஜக தேர்வு செய்து வந்துள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்