முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா மீதான ரஷ்யா தாக்குதல்:ஜோர்டான் ஆதரவு

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

அம்மான் - சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீதான வான்வழித் தாக்குதலுக்கு ஜோர்டானும் ஆதரவு தெரிவித்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த 4 ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது. அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக வெடித்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவர்களுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது. அதே நேரத்தில் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது ரஷ்யா படைகள் களத்தில் இறங்கி கடும் வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது.இந்நிலையில், ரஷ்யா மற்றும் ஜோர்டான் நாட்டு கூட்டுப்படைகள் ஜோர்டான் தலைநகர் அம்மானில் இருந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளன. 

இருநாடுகளும் இணைந்து தீவிரவாதத்தை ஒழிக்க தேவையான தகவல்களை பரிமாறிக் கொள்ள இருப்பதாகவும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் தெரிவித்தார். இதுதொடர்பாக இருநாட்டு அதிபர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்காக ஜோர்டானின் அம்மானில் தகவல் ஒருங்கிணைப்பு மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்