முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாண்டவர் அணி என்ற பெயர் கைவிடப்படுகிறது: விஷால் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 25 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை - பாண்டவர் அணி என்ற பெயர் கைவிடப்படுவதாக விஷால் தெரிவித்தார். கடந்த வாரம் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியை வீழ்த்தி, அதிக இடங்களில் வெற்றி பெற்றது விஷால் அணி. நடிகர் சங்கத் தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக அச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. நடிகர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்,

விஷால் உட்பட புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் விஷால். அப்போது அவர் கூறியதாவது: நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்த மூத்த உறுப்பினர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.பாண்டவர் அணி என்ற பெயரை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். பாண்டவர் அணி என்ற பெயர் கைவிடப்படுகிறது. எந்த சங்கத்திற்கும் நாங்கள் ஆதரவோ, எதிர்ப்போ இல்லை' என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago