முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்க தேர்தல் சிறப்பாக நடைபெற வசதிகள் செய்து கொடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி

ஞாயிற்றுக்கிழமை, 25 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை - நடிகர் சங்க தேர்தல் சிற்பபாக நடைபெற அனைத்து வசதிகளும் செய்து கொடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 18-ம் தேதி சென்னையில் பரபரப்பாக நடந்தது. இதில் பாண்டவர் அணியைச்சேர்ந்த நடிகர்கள் வெற்றி பெற்று நடிகர் சங்கத்தை கைப்பற்றினர். தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக விஷால், துணைத் தலைவர்களாக பொன் வண்ணன், கருணாஸ், பொருளாளராக கார்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாண்டவர் அணியைச் சேர்ந்த 20 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் தேர்வுக்குப்பின் தென்னிந்திய நடிகர் சங்க்தின் முதல் செயற்குழு கூட்டம் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. பாதுகாப்பு கருதி கூட்டம் நடைபெறும் இடம் அறிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டது.

புதிய தலைவர் நாசர் தலைமையில் செயற்குழு கூடியது. இதில்  பொது செயலாளர் விஷால் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சரத்குமார் அணியில் வெற்றி பெற்ற ராம்கி, நிரோஷா, டைரக்டர் கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நளினி மட்டும் வரவில்லை. நேற்று நடந்த செயற்குழுவில் நடிகர் சங்கத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்வது மூத்த நடிகர்களுக்கு கவுரவ பதவி வழங்குவது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது ஆகியவை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன் பிறகு கூட்ட விவரங்களை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து வெளியிட்டனர். பொது செயலாளர் விஷால் நிரூபர்களிடம் கூறியதாவது: இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று(நேற்று) எங்கள் பணியை தொடங்கி இருக்கிறோம். தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். நாங்கள் தேர்தலின் போது பாண்டவர் அணியாக இருந்தோம். இனி பாண்டவர் அணியாக இருக்க மாட்டோம். நடிகர் சங்கமாக செயல்படுவோம். எங்கள் அணி பெயரையாரோ தவறாக பயன்படுத்துவதாக கேள்விப் பட்டோம். இனி தவறாக பயன்படுத்த விடமாட்டோம். எங்கள் அணி இனி நடிகர் சங்கமாக செயல்படும்.

யாருக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ செயல்பட மாட்டோம். எஸ்.பி.ஐ.யுடனான ஒப்பந்தம் மற்றும் புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக அடுத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். தென்னிந்திய நடிகர் சங்கம் திரைப்படத்துறை சம்பந்தமான அனைத்து சங்கங்களுடனும் இணைந்து செயல்படும். நடிகர் சங்க அறக்கட்டளையில்,  தலைவர், பொது செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர் தவிர செயற்குழு உறுப்பினர் கள் 3 பேரும், பொதுக்குழு உறுப்பினர்கள் 3 பேரும் டிரஸ்டிகளாக உள்ளனர். இதில் நடிகர் கமலஹாசனையும் ஒரு டிரஸ்டியாக சேர்க்க முடிவு செய்துள்ளோம். இதற்கு கமல் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த தேர்தலில் முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தல் நல்லப்படியாக நடைபெற பாதுகாப்பு அளித்த காவல் துறைக்கு நன்றி, தேர்தல் முடிந்ததும் பள்ளியை சுத்தம் செய்து தருவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஐசரி கணேஷ், எங்கள் வெற்றிக்கு உழைத்த நடிகர் ரித்திஷ் ஆகியோருக்கு நன்றி. ரித்திஷ் உழைப்பு சாதாரண உழைப்பு அல்ல. நடிகர் சங்க தேர்தலை சென்னையில் இருந்து நியூயார்க்கில் உள்ளவர்கள் வரை இடைவிடாமல் நேரடி ஒளிபரப்பில் பார்த்த வாறு இருந்துள்ளனர். அந்த அளவுக்கு தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவ்வாறு விஷால் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்