முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்: நவ 23ம் தேதி நடக்கிறது

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 2ம் கட்ட கும்பாபிஷேகம் நவம்பர் 23ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ.18 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி துவங்கியது. கடந்த செப்டம்பர் 9ம் தேதி, 11 கோபுரங்களுக்கும், 43 உபசன்னதிகளுக்கும் முதல்  கட்ட கும்பாபிஷேகம் எளிமையாக நடந்தது. இதையடுத்து பெரிய பெருமாள் சன்னதி, அதில் உள்ள ஜெயவிஜய துவாரபாலகர், சிறிய கருடன், தங்ககோபுர விமானம், பெரிய கருடாழ்வார் சன்னதி, மற்றும் சக்கரத்தாழ்வார், ராமானுஜர் தாயார் சன்னதி ஆகிய வற்றும். ராஜகோபுரம், கார்த்திகை கோபுரம், ஆரியபட்டாள் கோபுரம், நாழிகேட்டான் கோபுரம், வடக்குவாசல் மொட்டை கோபுரம், வடக்கு வாசல் தாயார் சன்னதி கோபுரம், கிழக்கு வாசல் மொட்டை கோபுரம், கிழக்கு வாசல் வெள்ளை கோபுரம், மேலவாசல் மொட்டை கோபுரங்களுக்கும் 2ம் கட்டமாக வரும் 23ம் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பெரிய  பெருமாள் சன்னதி, பெரிய கருடாழ்வார் சன்னதியில் திருப்பணிகள் துவங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பெருமாள் சன்னதியில் மூலஸ்தானத்தில் மூலவர் பெரிய பெருமாள் சுதைக்கு புதிதாக மூலிகை தைலகாப்பு தயாரித்து பூசப்படுகிறது. பீடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு அஷடபந்தன மருந்து வைக்கும் பணி நடந்து வருகிறது. தங்க விமானம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது மூலஸ்தான கதவுகள் தங்கத் தகடுகள் சீரமைக்கும், ஆரியபடாள் கதவில் வெள்ளித் தகடுகள் சீரமைக்கும் பணியும் மும்முரமாக நடக்கிறது. பெரிய கருடாழ்வார் சன்னதியும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்