முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுவரை 82,000 டன் பருப்பு பறிமுதல்: துவரம் பருப்பு விலை குறைந்தது

புதன்கிழமை, 28 அக்டோபர் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - 12 மாநில அரசுகள் நடத்திய சோதனையில் இதுவரை 82 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் உளுந்து மற்றும் துவரம் பருப்பின் விலை சற்று குறைந்துள்ளது. துவரம் பருப்பின் விலை ஒரேயடியாக அதிகரித்து கிலோ ரூ.210க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில 12 மாநில அரசுகள் 8 ஆயிரத்து 394 இடங்களில் பரிசோதனை செய்ததில் சுமார் 82 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து துவரம் பருப்பின் விலை இன்று ரூ.20 குறைந்து கிலோ ரூ.190க்கு விற்பனை செய்யப்பட்டது. உளுந்தம் பருப்பின் விலை கிலோவுக்கு ரூ.8 குறைந்து ரூ.190க்கு விற்பனை செய்யப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பருப்பு ஒரு வாரத்திற்குள் சில்லறை விற்பனை சந்தைக்கு வந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் பருப்பின் விலை கணிசமாக குறையும்.

இருப்பதிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 57 ஆயிரத்து 455 டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள மொத்தவியாபார சந்தைகளில் ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.200ல் இருந்து ரூ.152 ஆக குறைந்துள்ளது. இதே போன்று ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவிலும் பருப்பின் விலை குறையத் துவங்கியுள்ளது.இதுவரை சத்தீஸ்கரில் 4 ஆயிரத்து 932 டன் பருப்பும், மத்திய பிரதேசத்தில் 2 ஆயிரத்து 370 டன்னும், ராஜஸ்தானில் 3 ஆயிரத்து 330 டன்னும், ஹரியானாவில் 2 ஆயிரத்து 189 டன் பருப்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago