முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விவேக்கின் மகன் திடீர் மறைவு

வியாழக்கிழமை, 29 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை - நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா மூளைக்காய்ச்சலால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக். இவருடைய மனைவி அருள்செல்வி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். விவேக்கின் மகன் பிரசன்னா (13 வயது) குமார் மூளைக்காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவருடைய உயிர் பிரிந்தது. திரையுலகினர் விவேக் மகனின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்