முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் மாநில மக்களை பாஜ.க தலைவர் அமித் ஷா அவமானப்படுத்தி விட்டார் : லல்லு பிரசாத் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2015      அரசியல்
Image Unavailable

பாட்னா - பீகார் மாநில சட்ட சபைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடு வார்கள் என்று பா.ஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியிருந்தார். அமித் ஷாவின் இந்த கருத்து பீகார் மாநில மக்களை அவமதித்த செயலாக உள்ளது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் நேற்று தெரிவித்தார்.

பீகார் மாநிலத்தில் தற்போது 5கட்டமாக சட்டசபைத்தேர்தல் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் அதி க இடங்களை கைப்பற்ற வேண்டும் என பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் அமித் ஷா பிரதமர் மோடி ஆகியோர் தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அமித் ஷா ஒரு கருத்தை கூறுகையில், பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டும் . இந்த தேர்தலிலில் பாஜக தோற்றால் பாகிஸ்தானில் உள்ளவர்கள் வெடி வெடித்து கொண்டாடுவார்கள் என்றார்.

அவரது இந்த விமர்சனம் குறித்து லல்லு பிரசாத் யாதவ் கூறுகையில், அமித் ஷா சோர்வடைந்து இது போன்ற கருத்தை தெரிவித்து இருக்கிறார்.வாக்குகளை பெறுவதற்காக சமூகத்தினரை தூண்டி விட்டு இருக்கிறார். அமித் ஷாவின் கருத் துதொடர்பாக நாங்கள் தேர்தல் ஆணையத்தை அணுகி முறையிடுவோம். சமூகத்தில் விஷத்தை ஏற்றும் வகையில் அமித் ஷா பேசி இருக்கிறார்.பெரும்பாலான தொகுதிகளில் சிறுபான்மையினரே இடம் பெற்று இருக்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துக்கள்சிறுபான்மையினர் ஐக்கிய ஜனதா தளம் , ராஷ்ட்ரிய ஜனதா தளம் .காங்கிரஸ் ஆகிய மெகா கூட்டணியை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள்.பீகாரில் பாஜ க வெற்றி பெற வேண்டும் என அமித் ஷா வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம்,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ள கூட்டணி வெற்றி பெற்றால் சிறையில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் முகமது சகாபுதீன் போன்றவர்கள் வெற்றியை கொண்டாடுவார்கள் என்றும் அமித் ஷா கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கும் லல்லு பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்