முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையை தேசிய புனித தலமாக்க வேண்டும்: உம்மன்சாண்டி வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் - சபரிமலை ஐய்யப்பன் கோவிலை தேசிய புனித தலமாக்க வேண்டும் என கேரள முதல்வர் உம்மன்சாண்டி வலியுறுத்தியுள்ளார். சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்குகிறது. இதையொட்டி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள்.

இதனால் பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசிப்பதற்காக தென் மாநில அறநிலையத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. கேரள முதல்வர் உம்மன்சாண்டி இந்தக் கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

கேரள தேவசம் போர்டு அமைச்சர் சிவகுமார், தெலங்கானா மாநில அறநிலையத் துறை அமைச்சர் அல்லோலா இந்திரகரன் ரெட்டி, தமிழக அறநிலையதத் துறை ஆணையாளர் வீரசண்முக மணி மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநில அறநிலையத் துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி பேசியதாவது: சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் இவ்வருடம் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சபரிமலையில் இதுவரை சுமார் ரூ.65 கோடி மதிப்புள்ள பிலான் வளர்ச்சிப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. வருடந்தோறும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப வருடந்தோறும் கூடுதல் வசதிகள்  ஏற்படுத்தப்பட்டு வருகின்றஙன. சபரிமலை ஐய்யப்பன் கோயிலை தேசிய புனித தலமாக்க மத்திய அரசிடம் ஏற்கெனவே கேரளா வலியுறுத்தியுள்ளது. அனைத்து தென்மாநிலங்களும் இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்