முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 பைசா குறைப்பு

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 பைசா குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு நள்ளிரவு முதல் அமல்லாகியது. அதேநேரத்தில், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

தற்போதைய அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.61.02 என விற்பனை செய்யப்படும். தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, ரூபாய் மதிப்பு உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் அடிப்படையில் பெட்ரோல் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, டீசல் விலை கடந்த அக்டோபர் 1-ல் லிட்டருக்கு 50 பைசாவும், அக்டோபர் 16-ல் லிட்டருக்கு 95 பைசாவும் அதிகரிக்கப்பட்டது. விலை குறைப்பைப் பொறுத்தவரையில், கடந்த செப்டம்பர் 1-ல் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.2-ம், டீசல் விலையில் 50 பைசாவும் குறைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்