முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி ரஷ்யா வல்லரசு நாடு இல்லை: அமெரிக்கா

திங்கட்கிழமை, 2 நவம்பர் 2015      உலகம்

வாஷிங்டன்: ரஷ்யா இனிமேல் வல்லரசு நாடு இல்லை. அந்த நாட்டின் பொருளாதாரம் ஸ்பெயினைவிட பின்தங்கிய நிலையில் உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்குமிடையே பனிப் போர் மூண்டது.  இரு நாடுகளும் நேரடியாக மோதிக்கொள்ளாவிட்டாலும், சுமார் 44 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பனிப்போர் நீடித்தது. 1991 இல் சோவியத் யூனியன் உடைந்தபிறகு பனிப் போர் படிப்படியாக மறைந்தது.

சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014இல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே மீண்டும் பனிப்போர் தொடங்கி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் கூறுகையில்,

பழைய சோவியத் யூனியன் பலம் வாய்ந்த நாடாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, இப்போதைய ரஷ்யா மிகவும் பலவீனமாக உள்ளது. பொருளாதாரம் தொடர்ந்து சறுக்கிக் கொண்டே செல்கிறது. பொருளாதார ரீதியில் பட்டியடும்போது அந்த நாடு தற்போது உலகின் 15ஆவது இடத்தில் உள்ளது. அந்த வகையில் ஸ்பெயினைவிட ரஷ்யா பின்தங்கிய நிலையில் இருக்கிறது. உக்ரைன், சிரியா விவகாரங்களால் உலக அளவில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் பெரும்பான்மையான நாடுகள் ரஷ்யாவுடனான உறவைத் துண்டித்து விட்டன. இப்போதைய நிலையில் ஈரானும் சிரியா ஜனாதிபதி ஆசாத்தும் தான் ரஷ்யாவின் நெருங்கிய நண்பர்கள். சில நாட்களுக்கு முன்பு சிரியாவில் எல்லை தாண்டி பறந்த 2 ரஷ்ய போர் விமானங்களை அமெரிக்காவின் எப்.ஏ.-18 வகையைச் சேர்ந்த 4 போர் விமானங்கள் வழிமறித்து திருப்பி அனுப்பின. இனிமேல் ரஷ்யா வல்லரசு இல்லை, அந்த நாடு பொருளாதார ரீதியில் பின்தங்கிய பலவீனமான நாடாகும் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்