முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சகிப்புத்தன்மை விவகாரம்: ஜனாதிபதி மாளிகை நோக்கி சோனியா தலைமையில் காங்கிரஸ் பேரணி

செவ்வாய்க்கிழமை, 3 நவம்பர் 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதைக் கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஜனாதிபதி மாளிகை நோக்கி காங்கிரசார் நேற்று பேரணி நடத்தினர். இந்த பேரணியின் முடிவில் சகிப்புத்தன்மை குறைவால் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் காங்கிரசார் மனு அளித்தனர்.நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வருவது குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் திடீரென பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.

அதுவும் 1984 சீக்கியர் கலவரத்துக்காக காங்கிரஸ் வெட்கித் தலைகுனிய வேண்டும்; சகிப்புத்தன்மை பற்றி பேசுவதை அக்கட்சி நிறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறிய சில மணிநேரத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் தலைமையில் காங்கிரசார் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் மூத்த தலைவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இப்பேரணி முடிவில் நாட்டில் சகிப்புத் தன்மை குறைவால் ஏற்பட்டு வரும் நிகழ்வுகள் குறித்து மனு ஒன்றை பிரணாப் முகர்ஜியிடம் சோனியா உள்ளிட்டோர் வழங்கினர். டெல்லியில் இந்த பேரணி நடத்தப்பட்ட போது இதற்கு எதிராக 50க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் போட்டி பேரணி நடத்த முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 1984-ம் ஆண்டு இந்திரா படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கோரி இவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago