முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைரியம் இருந்தால் என்னிடம் நேராக பேசு’ என்று குஷ்பு ஹசீனாவுக்கு சவால்

வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - ‘என்னை சீண்டினால் புலியாக மாறுவேன்’ என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கூறியிருக்கிறார். ‘தைரியம் இருந்தால் என்னிடம் நேராக பேசு’ என்றும் அவர் ஹசீனாவுக்கு சவால் விடுத்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் 3வது கொங்கு மண்டல மாநாடு திருப்பூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு, தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிரச்னை குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.

ஆனால், ஒரு பெண்ணுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். அவர் பெயரை சொல்ல கூடவிரும்பவில்லை.சத்தியமூர்த்தி பவன் கடந்த ஓராண்டில் தமிழக காங்கிரஸ் ஓஹோ என வளர்ந்து வருகிறது. நான் 30 ஆண்டுகளாக சென்னையில் இருக்கிறேன். எனக்கு சத்யமூர்த்தி பவன் எங்கே இருக்கிறது என தெரியாமல் இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டாகதான் சத்யமூர்த்தி பவன் எங்கு இருக்கிறது என தெரிகிறதுஎனக்கு மட்டுமல்ல பலருக்கும் சத்யமூர்த்தி பவன் இருக்கும் இடமே இப்போதுதான் தெரிகிறது. இந்த ஒராண்டில்தான் சத்யமுர்த்தி பவன் செயல்படுகிறது.

தொண்டர்களும் வந்து செல்கிறார்கள் என்று கூறினார் குஷ்பு. நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என கடந்த சில தினங்களுக்கு முன்னர் கார்த்தி சிதம்பரம் கருத்து கூறியிருந்தார். அவரது கருத்துக்கு பதிலளித்த குஷ்பு, ‘ப.சிதம்பரம், தங்கபாலு, கார்த்தி சிதம்பரம் போன்றவர்களை நம்பி காங்கிரஸ் இல்லை’ என கருத்து தெரிவித்திருந்தார்.குஷ்புவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

‘காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து, உழைத்து தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களைப் பற்றியும், தேசமே போற்றும் தேசியத் தலைவர்களைப் பற்றியும் சற்று நாவடக்கத்துடன் பேசினால் குஷ்புவுக்கு நல்லது’ என அவர் கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்த குஷ்பு, ‘என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது’ என்று தில்லாக பதிலளித்தார். இந்நிலையில், திருப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய அவர், தேவையில்லாமல் சீண்டினால் நான் புலியாக மாறிவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago