முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் ஆளும் கட்சி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2015      அரசியல்
Image Unavailable

சண்டிகர், பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் அகாலிதளம் கட்சியினர் மட்டுமே வளம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப்பின் சில பக்கங்கள் எரிக்கப்பட்டதைக் கண்டித்து பரிட்கோட் மாவட்டத்தில் கடந்த மாதம் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குர்ஜித் சிங், கிரிஷன் சிங் ஆகிய 2 சீக்கியர்கள் பலியாயினர். இதையடுத்து போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

இந்நிலையில் 2 நாள் சுற்றுப் பயணமாக பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றுள்ள ராகுல் காந்தி பரிட்கோட் நகருக்கு ரயிலில் வந்தார். அங்கு துப்பாக்கிச் சூட்டில் பலியான 2 கிராமத்து இளைஞர் களின் குடும்பத்தினரை ராகுல் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் ராகுல் காந்தி கூறும்போது,

துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத் தினருக்கு நீதி வேண்டும். இதில் தொடர்புடைய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குடியரசுத்தலை வர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து இதுகுறித்து முறையிடுவோம். பஞ்சாபில் இப்போது அகாலி தளம் கட்சியினர் மட்டுமே வளம் பெற்றுள்ளனர். மற்றவர்கள் எந்தப் பயனையும் அடையவில்லை. குறிப்பாக ஆட்சியாளர்களின் எதிர்காலம் பிரகாசமாக தோன்றுகிறது. ஆனால் வரும் காலத்தில் மாநிலத் தில் உள்ள அனைவரும் வளம் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

மாநிலத்தில் உள்ள விவசாயி கள், தலித்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட அனைவரின் நலனுக்காகவும் கூட்டாக போராடு வோம். வரும் 2017-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இப்போதைய அகாலிதளம்-பாஜக தலைமையிலான ஆட்சியை மாற்ற வும் காங்கிரஸ் நிர்வாகிகள் பாடுபடுவார்கள் என்றார். முன்னதாக, இறந்த இளைஞர் களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக சுமார் 8 கி.மீ. தூரம் நடை பயணமாக சென்ற ராகுல் காந்தி வழியில் பள்ளி மாணவர்கள், கிராம பொதுமக்களுடன் உரை யாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்