முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் ரூ.50க்கான சுதர்சன டிக்கெட் விற்பனை திடீர் நிறுத்தம்

சனிக்கிழமை, 7 நவம்பர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.50க்கான சுதர்சன டிக்கெட் சேவை நிறுத்தப்பட்டது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ரூ.50க்கான சுதர்சன டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுடன் 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர பக்தர்கள் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர். ஆனால் தற்போது தேவஸ்தான நிர்வாகம் இச்சேவை ரத்து செய்து விட்டு ரூ.300க்கான தரிசன டிக்கெட்டுகளை 25 ஆயிரம் எண்ணிக்கையாக உயர்த்தி உள்ளது.

இதற்கு பக்தர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை கோயில் உண்டியலில் காணிக்கையாகவும், நன்கொடையாகவும் பல கோடி ரூபாய் வழங்கி வருகின்றனர். ஆனால் தேவஸ்தான நிர்வாகம் லாபம், நஷ்டத்தை காண்பித்து ரூ.50க்கான  டிக்கெட் சேவையை நிறுத்துவதாக அறிவித்திருப்பது ஏழை மற்றும் நடுத்தர் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே தொடர்ந்து ரூ.50க்கான டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்