முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலால் வரி உயர்வு: டீசல் - 40 பைசாவும் - பெட்ரோல் ரூ.1.60 அதிகரிப்பு

சனிக்கிழமை, 7 நவம்பர் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு திடீரென்று உயர்த்தியுள்ளதால் வர்த்தக அடையாளம் இல்லாத சாதாரண டீசல் - 40 பைசாவும் - பெட்ரோல் ரூ.1.60 அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை வெள்ளி இரவு முதல்  உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து., வர்த்தக அடையாளம் இல்லாத சாதாரண பெட்ரோல் மீது முன்னர் விதிக்கப்பட்டிருந்த கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 5.46லிருந்து தற்போது ரூபாய் 7.06 ஆக உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் வர்த்தக அடையாளம் இல்லாத சாதாரண பெட்ரோல் பயன்படுத்துவோர் லிட்டர் ஒன்றுக்கு கூடுதலாக ரூபாய் 1.60 செலவிட வேண்டியிருக்கும்.

இதேபோல் வர்த்தக அடையாளம் இல்லாத சாதாரண டீசல் மீதான கலால் வரியும் லிட்டர் ஒன்றுக்கு 40 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக அடையாளம் இல்லாத சாதாரண டீசல் மீது முன்னர் விதிக்கப்பட்டிருந்த கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 4.26லிருந்து தற்போது ரூபாய் 4.66 ஆக இருக்கும். வர்த்தக அடையாளம் கொண்ட பெட்ரோல் மீது முன்னர் விதிக்கப்பட்டிருந்த கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 6.64லிருந்து ரூபாய் 8.24 உயர்த்தப்பட்டுள்ளது.

வர்த்தக அடையாளம் கொண்ட டீசல் மீது முன்னர் விதிக்கப்பட்டிருந்த கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 6.62லிருந்து ரூபாய் 7.02 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஜனவரி மாதம்வரை மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியினை நான்கு முறை உயர்த்தியுள்ளது. இவ்வகையில் மத்திய அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை மூலம் ரூபாய் 7.75 மற்றும் ஒரு லிட்டர் டீசல் விற்பனை மூலம் ரூபாய் 6.50 கலால் வரியாக கிடைத்து வருகிறது. இவ்வகையில் மட்டும் அரசுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருமானமாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்