முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதத்தையும்,தீவிரவாதத்தையும் பிரிக்க வேண்டும் : ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 16 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

அன்டல்யா(துருக்கி) - தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒரே குரலில்  பேசுவதுடன் ஒன்றாக இணைந்து நடவடிக் கை எடுக்க வேண்டும்.தீவிரவாதத்தையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என்று ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஜி-20மாநாடு துருக்கியில் உள்ள அன்டல்யா நகரில்  நடைபெற்றது. இந்த அமைபில் உலக  பொருளாதாரத்தில் முன்னிலையில் உள்ள நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன.இதில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் மோடி உரையாற்றிய விவரம் வருமாறு, தீவிரவாதத்தையும் மதத்தையும் பிரிப்பதற்கு உலக நாடுகள்  ஒரு மித்த நிலைப்பாட்டை மேற் கொள்ள வேண்டும்.தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு நாடுகள் இடையே ஒத்துழைப்பு தேவை.நாம் மதத்தலைவர்கள், சிந்தனையாளர்கள், மற்றும் கருத்தாளர்கள் ஆகியோரை க் கொண்டசமூக இயக்கத்தினை உருவாக்க வேண்டும்.

இவர்கள் இளைஞர்களிடம் இது குறித்து பேச வேண்டும்.மேற்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பல நாடுகளில் விரிவான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டிய அவசரம் உள்ளது. தீவிரவாதம் தனது குணத்தை மாற்றிக் கொண்டு சைபர் தளத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது. அந்த நவீன தொழில் நுட்பம் மூலம் தீவிரவாதத்திற்கான பிரச்சாரமும் நடைபெறுகிறது. தீவிரவாதம் எந்த ஒரு நாட்டையும்பாகுபடுத்தி பார்க்காது. எனவே உலக நாடுகள் ஒன்று பட்டு ஒரே குரலில் பேசவேண்டும்.மேலும் ஒன்று பட்டு தீவிரவாதத்திற்கு எதிராக போராட வேண்டும். இதில் அரசியல் பரிசீலனைகளுக்கு எந்த வித இடமும் இல்லாமல் செயல்பட வேண்டும்.தீவிரவாதத்தின் சவால்களை எதிர் கொள்வதற்கு சர்வ தேச சட்ட வரையறை மறு கட்டமைக்க வேண்டும்.

தீவிரவாதத்தைஒடுக்கு வதற்கு சர்வதேச ஒத்துழைப்பு, மற்றும் புலனாய்வு தகவல் ஒத்துழைப்பு தேவை. சர்வதேச தீவிரவாதம் தொடர்பாக ஒருமித்த கூடுகை மேற் கொள்ள வேண்டும். தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை ஆவதை நாம் தடுக்க நமது முயற்சிகளை வலிமைப்படுத்த வேண்டும். தீவிரவாதிகள் செயல்பாட்டிலும் இடையூறு ஏற்படுத்த வேண்டும். தீவிரவாதத்திற்கு நிதி உதவி நடப்பதையும் நாம் முறியடிக்க வேண்டும்.மேற்குஆசியா பிரச்சினை உலகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த மேற்கு ஆசியாவில் தீவிர மனித  சவால்கள் உள்ளன. அந்த சவால்கள் பரந்த அளவிலான விளைவுகளை மேற்கு ஆசிய நாடுகளில் ஏற்படுத்தியுள்ளன.

தீவிரவாத சவால்களை எதிர் கொள்வதற்கு நீண்ட கால அணுகுமுறைகளையும் வலிமை மிக்க  பங்களிப்பையும் ஐக்கிய நாடுகள் சபையில் மேற் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜி-20 நாடுகள் அமைப்பில் உள்ள தலைவர்கள்அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், மற்றும் சீனா ஜனாதிபதி ஜி ஜின் பிங்க்  ஆகியோரிடம் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு உரிய நடவடிக் கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்