முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ் தலைமையகத்தில் பிரான்ஸ் குண்டு மழை

திங்கட்கிழமை, 16 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

பாரிஸ் - பாரிஸ் தாக்குதல்களின் எதிரொலியாக, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பு சிரியாவில் பலமாக இருக்கும் ராக்கா நகர் மீது பிரான்ஸ் வான்வழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளது. அந்த அமைப்பினர் இருப்பதாக கருதப்படும் இடங்கள் மீது தொடர்ச்சியாக ஜெட் விமானங்கள் மூலம் பிரான்ஸ் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு இருபது குண்டுகள் விண்ணிலிருந்து வீசப்பட்டன என்று பிரெஞ்ச் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ராக்கா நகரில் ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டு மையம், ஆயுதக் கிடங்கு, பயிற்சி முகாம் ஆகியவை உட்பட பல இடங்களை இலக்கு வைத்து இந்த வான்வழித் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. பாரிஸ் படுகொலைகள், ஐ எஸ் அமைப்பால் தமது தேசத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு போர் என்றும், அவர்கள் மீது ஈவு இரக்கமின்றி எதிர்தாக்குதல்கள் இருக்கும் என்றும் பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

சிரியாவில் செயல்படும் ஜிகாதிகளுக்கு எதிரான சர்வதேச வான் தாக்குதல் நடவடிக்கைகளில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரான்சும் இணைந்து கொண்டபிறகு முன்னெடுக்கப்பட்டுள்ள மிகப் பெரியத் தாக்குதல்கள் இது ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்