முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்சில் காவல் துறையினர் சோதனை

திங்கட்கிழமை, 16 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

பாரிஸ் - பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, நாட்டின் பல பகுதிகளை காவல்துறையினர் முற்றுகையிட்டு தேடுதல் நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர். இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கடந்த வெள்ளிகிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, விசாரணைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. டுலூஸ் மற்றும் க்ரெனோபிள் நகரங்களிலும் காவல்துறையினர் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பெல்ஜியத்திலுள்ள ஒரு குழுவினரால் திட்டமிடப்பட்டு,

பிரான்ஸ் நாட்டிலுள்ளவர்களின் உதவிகளுடன் இத்தாக்குதல்கள் நடைபெற்றன என்று பிரெஞ்சு விசாரணையாளர்கள் கூறுகின்றனர். இத்தாக்குதலில் ஈடுபட்டார் என்று சந்தேகிக்கப்படும் தற்கொலை குண்டுநபர் ஒருவரின் சகோதரரான சாலேஹ் அப்தேசலாம் எனும் நபர் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார். அந்த நபர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டாலும், இத்தாக்குதல்கள் நடைபெற்ற சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டார் என ஞாயிற்றுக்கிழமையன்று தகவல்கள் வெளியாயின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்