முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாகுர் நியமனம்

புதன்கிழமை, 18 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாகுர் நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள எச்.எல்.டட்டூ தற்போது உள்ளார் .அவரது பதவிக்காலம் முடிவடைவதைத்தொடர்ந்து டி.எஸ்.தாகுர்  தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். டி.எஸ் தாகுர் பெயரை தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிஎச்.எல் டட்டூ பரிந்துரைத்தார். நீதிபதிகளை உள்ளடக்கிய கொலிஜியம் முறையிலேயே டி.எஸ்.தாகுர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எச்,எல். டட்டூ வருகிற டிசம்பர் மாதம் 2ம் தேதியன்று ஓய்வு பெறுகிறார். அவரது ஓய்விற்கு பின்னர் புதிய தலைமை நீதிபதியாக தாகுரை நியமிப்பதற்கு தற்போதயை தலைமை நீதிபதி டட்டூ  அரசுக்கு பரிந்துரை செய்தார்.

தாகுரின்  பெயரை சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன் அந்த கோப்பு பிரதமர்  அலுவலகத்திற்கு செல்கிறது. பின்னர் அந்த கோப்பு ஜனாதிபதிக்கு செல்லும் .புதிய நீதிபதி நியமனத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தவுடன் தாகுர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அமைப்பில் நீதிபதிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் இடம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இத்ந ஆணையத்தினைஜே,எஸ் கேகர் தலைமையிலான 5நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வாயம் ரத்து செய்தது. இதனால் தற்போது பழைய கொலிஜியம் முறையிலேயே  நீதிபதிகள் அடங்கிய குழு உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியை தேர்வு செய்துள்ளது.

நீதிபதிகளை நியமனம்செய்யும் கொலிஜியம் அமைப்பு வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளை உச்ச நீதிமன்ற அமர்வாயம் கேட்டு இருந்தது. இந்த ஆலோசனைகள் தொடர்பாக இந்த மாதம் 5ம் தேதியன்று விவாதிக்க உச்ச நீதிமன்ற அமர்வாயம் முடிவெடுத்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் டி.எஸ் தாகுர் உச்ச நீதிமன்றத்தின் 43வது தலைமை நீதிபதி ஆவார். அவர் வருகிற 2017ம்ஆண்டு ஜனவரி 4ம் தேதி வரை இந்த பதவியில் இருப்பார்.இந்திய கிரிக் கெட்நிர்வாக அமைப்பு சிறப்பாக செயல்படுவது உள்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் தாகுர் அமர்வாயத்தின் தலைமை பொறுப்பில் இருந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்