முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏற்றுமதியை அதிகரிக்க சலுகை: மத்திய அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு 3 சதவீத வட்டிச் சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் நடை பெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். 2015 ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஏற்றுமதி செய்யப்படும் பொருள் களுக்கு இத்தகைய வட்டிச் சலுகை அளிக்கப்படும். இந்த சலுகை ஐந்து ஆண்டுகளுக்கானது. இந்த சலுகை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஆய்வு செய்யப்படும் என அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த சலுகை காரணமாக ஆண்டுக்கு ரூ.2,500 கோடி முதல் ரூ.2,700 கோடி வரை கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டம் சாரா செலவுகளை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் ரூ. 1,625 கோடி நிதியம் உள்ளது. இதன் மூலம் இந்த வட்டிச் சலுகையை சமாளிக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து ஏற்றுமதிகளுக்கும் இந்த வரிச் சலுகை பொருந்தும். இந்த சலுகை மூலம் நடுத்தர, குறுந்தொழில்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் வேளாண் சார்ந்த பொருள் ஏற்றுமதி, உணவு பதப்படுத்தல் பொருள் ஏற்றுமதி ஆகியன அதிகரிக்கும் என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார். முந்தைய காங்கிரஸ் அரசு இத்தகைய வட்டிச் சலுகையை ரத்து செய்துவிட்டது. இதனால் நாட்டின் ஏற்றுமதியானது குறைந் துவிட்டது. இந்த சலுகை மூலம் ஏற்றுமதியாளர்கள் கட்டுபடியாகும் விலையில் கடன் பெற முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்