முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருவில் சோட்டா ஷகீல் கூட்டாளிகள் கைது

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

பெங்களூரு -  நிழலுலக தாதா சோட்டா ஷகீலின் நெருங்கிய கூட்டாளி சையத் நியாமத், தனிப்படை போலீஸாரால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பிரபல நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் வலதுகரமாக இருப்பவர் சோட்டா ஷகீல். இவர் தற்போது சிபிஐ அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் இருக் கும் சோட்டா ராஜனுக்கு நெருக்க மாக இருந்துள்ளார்.

சர்வதேச போலீஸாரால் தேடப்படும் சோட்டா ஷகீலின் கூட்டாளிகள் பெங்களூரு, மங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் உலவுவ தாக தகவல் வெளியானது. இந்நிலையில் சோட்டா ஷகீலின் நெருங்கிய கூட்டாளி சையத் நியாமத் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இது தொடர்பாக பெங்களூரு குற்றப்பிரிவு தனிப்படை காவல் துறை அதிகாரி சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  சோட்டா ஷகீலின் நெருங்கிய கூட்டாளி சையத் நியாமத் (எ) ரஹ்மான் (28) பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக திலக் நகர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கப்பட்டது. சையத் நியாமத்துக்கு நெருக்க மானவர்களை கண்காணித்ததில், அவர் பிஸ்மில்லா நகர் 3-வது தெருவில் உள்ள வீட்டில் பதுங்கி யிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீஸார் அந்த வீட்டை சுற்றி வளைத்து, சையத் நியாமத்தை கைது செய்தனர்.

முதல் கட்ட விசாரணையில் கர்நாடகாவில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர் களை கொலை செய்து, அதன் மூலம் மதக் கலவரம் ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டது தெரிய வந்தது. இந்த சோதனையில் சையத் நியாமத் மட்டுமில்லாமல் அவரது கூட்டாளிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 3 பேரையும் தனித்தனியாக, ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago