முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலுடன் அருண் ஜெட்லி சந்திப்பு

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் அடுத்த வாரம் துவங்கவுள்ள நிலையில் காங் கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்து பேசினார். பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் வரும் 26-ம் தேதி துவங்கி, டிசம்பர் 23-ம் தேதி வரை ஒரு மாதம் காலத்துக்கு நடக்கவுள்ளது. இந்த கூட்டத் தொடரின் போது, சரக்கு மற்றும் சேவை வரி உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறை வேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த முறையும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால், முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவது பெரும் பிரச்சினையாக இருக்கும் என தெரிகிறது. எனினும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்றும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் உதவியை நாடப் போவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த சில தினங்களாக தெரிவித்து வந்தார். 

இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை நேற்று முன்தினம் அவர் திடீரென சந்தித்து பேசினார். அப்போது இருவரும் என்ன விவாதித்தனர் என்பது குறித்து காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. அதே சமயம், அடுத்த மாதம் நடைபெறும் தனது மகளின் திருமணத்துக்கு அழைப்பு விடுக்கவே ராகுலை ஜெட்லி சந்தித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago