முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் மாநில அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பீகார் மாநில அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. பீகார் மாநிலத்தில்  புதிய அரசு நேற்று பதவியேற்றுக் கொண்டது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.  பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்என காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மீம் அப்சல் நேற்று கூறினார்.மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பீகாரில் லல்லு பிரசாத் யாதவின் இருமகன்கள் நிதிஷ் குமார் அமைச்சரவையில்இடம் பெற்று இருக்கிறார்கள். இது அரசியல் வாரிசுகள் தொடர்ந்து பதவி ஏற்பதை காட்டுகிறது என்ற விமர்சனங்கள் வருகின்றன.இந்த கருத்தை ஏற்க முடியாது  . அந்த இருவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள். லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி கூட்டணியின் முக்கிய கட்சியாகும்.

கூட்டாட்சியின் உணர்வுடன் பீகார் மாநில முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்களின் எண்ணங்களுக்கும் மரியாதை அளிக்க வேண்டும்.நேற்று புதிய முதல்வராக நிதிஷ் குமாரும் இதர அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் . அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள். மக்களுக்கு அளிக்கப்பட்ட பொதுவான திட்டங்கள் நிறைவேற பீகார் மக்களுக்காக நாங்கள் முயற்சி எடுப்போம்என்று அப்சல் தெரிவித்தார். பீகார் மாநில தேர்தல் முடிவு மோடி அரசு மீதான மக்கள் கருத்தை ஒட்டு மொத்தமாக பிரதிபலிப்பதாக இருக்கிறதுஎன்றும் அவர்கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்