முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி இன்று மலேசியா செல்கிறார்

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பிரதமர் நரேந்திர மோடி இன்று மலேசியா செல்கிறார். மலேசியா பயணத்தை நிறைவு செய்து கொண்டு அவர் சிங்கப்பூர்  செல்கிறார். இருநாடுகளின் பரஸ்பர உறவு குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். பிரதமர் நரேந்திர மோடி 3நாள் அரசு முறை பயணமாக இன்று மலேசியாவிற்கு செல்கிறார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற இருக்கும் 13வது ஆசியான் மாநாட்டிலும் 10வது கிழக்கு இந்திய மாநாட்டிலும் மோடி கலந்து கொள்கிறார். தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாடுகளில் பங்கேற்கிறார்கள்.

இந்த இரண்டு மாநாடுகளுக்கும் மலேசிய பிரதமர் அப்துல் ரசாக் தலைமை தாங்குகிறார். ஆசியான் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் சுமார் 50 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். இந்தியாவின் 4வது பெரிய வர்த்தக கூட்டாளியாக ஆசியான் நாடுகள் உள்ளன. இந்திய மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு மட்டும் சுமார் 7600கோடி அமெரிக்கடாலர் அளவிற்கு வர்த்தகம் நடந்துள்ளது. இந்த 2 மாநாட்டையும் முடித்துக் கொண்டு பிரதமர் ரசாக்குடன் மோடி இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். தீவிரவாதம், சட்ட விரோத குடியேற்றம் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கின்றனர்.

மலேசியாவில் மகாத்மாக காந்தி மற்றும் சுவாமி விவேகானந்தர் சிலைகளையும் மோடி திறந்து வைக்கிறார். மலேசிய பயணத்தை முடித்துக் கொண்டு23ம் தேதி யன்று பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்கிறார். அங்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்குடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். சிங்கப்பூர் மக்கள் தொகை 56லட்சம் ஆகும். இதில் மூன்றரை லட்சம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். கடந்த ஆண்டு சிங்கப்பூருடன் 1700கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்யப்பட்டது. சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு 24ம் தேதியன்று பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்