முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்விட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை: உலகளவில் 2-ம் இடம் பிடித்தார் பிரதமர் மோடி

சனிக்கிழமை, 21 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கையில் உலகளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை சுமார் 16.1 மில்லியன் ஆவர். முதலிடத்தில் 66.1 மில்லியன் தொடர்வோருடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தில் இருக்கின்றார். பிரதமர் மோடியை சுமார் இரு மாதங்களில் 10 லட்சம் பேர் ட்விட்டரில் பின்பற்றியுள்ளனர். செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதியில் 15 மில்லியன் பேர் மோடியை ட்விட்டரில் பின் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி பிரதமர் பதவியில் பொறுப்பேற்ற பின் சுமார் 11.9 மில்லியன் பேர் மோடியை பின் தொடர்ந்திருக்கின்றனர். 2009 ஆம் ஆண்டு முதல் ட்விட்டர் பயன்படுத்தி வரும் மோடி உலகில் அதிகம் பின்பற்றப்படும் தலைவர்களில் இரண்டாம் இடம் பிடித்திருக்கின்றார். செப்டம்பர் 17, 2014 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 17, 2015 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அதிக ஃபாளோவர்களை கொண்ட எண்ணிக்கையிலும் பிரதமர் மோடி சாதனை புரிந்திருக்கின்றார். இந்த காலக்கட்டத்தில் சுமார் 8.8 மில்லியன் பேர் புதிதாக மோடியை பின்பற்றியிருக்கின்றனர்.

இந்தியாவை பொருத்த வரை ட்விட்டரில் அதிக ஃபாளோவர்களை கொண்டிருப்போர் பட்டியலில் மோடி மூன்றாம் இடத்தில் இருக்கின்றார். இந்தியாவில் அதிக ட்விட்டர் ஃபாளோவர்களை அமிதாப் பச்சன் 17.8 மில்லியன் ஃபாளோவர்களும், ஷாருக் கான் 16.2 மில்லியன் ஃபாளோவர்களையும் பெற்று முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்