முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான நடவடிக்கை: ஐ.நா. சபையில் பிரான்ஸ் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 21 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க்: ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.  பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 129 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து ஐ.எஸ். அமைப்பின் தலைமையகமான சிரியாவின் ரக்கா நகரம் மீது பிரான்ஸ் போர்விமானங்கள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மற்றும் அல்-காய்தா ஆதரவு அமைப்புகளை அழிப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் தரப்பில் வியாழனன்று வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

பாரீஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பகிரங்கமாக பொறுப்பு ஏற்றுள்ளது. அந்த அமைப்பு உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக மேற் கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகளை இரட்டிப்பாக்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் ஒருமனதாகச் செயல்பட்டு ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும். இதற்கு ஐ.நா. சபை அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரீஸ் தாக்குதல் குறித்து பிரான்ஸ் பிரதமர் மானுவேல் வால்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது., சிரியா, இராக் நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு லட்சக்கணக்கான அகதிகள் புகலிடம் தேடி வருகின்றனர். அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளும் அடைக்கலம் அளித்து வருகின்றன. இதை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஐரோப்பாவுக்குள் ஊடுருவியுள்ளனர். பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்