முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்சுக்கு ஆஸி., வீரர் ஜான்சன் புகழாரம்

சனிக்கிழமை, 21 நவம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

மெல்பர்ன்: தான் சந்தித்த வீரர்களில், தன்னால் கட்டுப்படுத்த முடியாத வீரர் என்று தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் தான் என்று ஓய்வுபெற்ற ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சன் புகழாரம் சூட்டியுள்ளார். ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன், சமீபத்தில் பெர்த்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஏபி டி வில்லியர்ஸ் குறித்து கருத்து தெரிவித்த அவர்.,

எனது தலைமுறை வீரர்களில் தலைசிறந்த வீரர் டி வில்லியர்ஸ். அவரை வெளியேற்றுவது கடினமானதும் அதே சமயம் மிகவும் சவாலான விஷயமும் கூட என்று கூறியுள்ளார். தனது பழைய நினைவுகளை குறித்து கூறியுள்ள மிட்செல் ஜான்சன், “2014ஆம் ஆண்டு செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற போட்டி எனக்கு நினைவில் இருக்குறது. அந்த ஆட்டத்தில் நான் விரைவிலேயே சில விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டேன். அப்போது டிவில்லியர்ஸ் களமிறங்கினார்.

மறுமுனையில் எத்தனை விக்கெட் போயுள்ளது, எந்த பந்துவீச்சாளர் அந்த விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதெல்லாம் அவர் யோசிக்கவேயில்லை. மிகவும் அமைதியாகவும், அதேநேரம் அவரது இயல்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார். இது போன்ற ஒருவரிடம் இருந்து வெளிப்படுவது உண்மைமையிலேயே கடினமானது. உங்கள் விளையாட்டில் நீங்கள் தலைசிறந்தவராக இருந்தால்தான் இது சாத்தியம். ஆனாலும், இதுபோன்ற வீரர்களுக்கு எதிராக விளையாடியது பெரிய சவால் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்