முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகம் முழுவதும் தீவிரவாதத்தின் நிழல் பரவியுள்ளது மலேசியாவில் பிரதமர் மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

கோலாலம்பூர்: சமீபத்தில் பல் வேறு நாடுகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கும் நிலையில் இந்த தீவிரவாத நிழல் உலகம் முழுதும் பரவி இருக்கிறது என்று இந்திய பிரதமர் மோடி கிழக்கு ஆசிய மாநாட்டில் நேற்று தெரிவித்தார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்  கிழக்கு ஆசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில் தற்போது பல்வேறு நாடுகளில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடக்கிறது. இந்த தாக்குதலின் நிழல் உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது.இந்த தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு புதிய நிலைபாட்டை மேற் கொள்ள வேண்டும்.

பிரான்ஸ் தலைநகர்பாரிஸ் சிரியா நாட்டின் பெய்ரூட், துருக்கி நாட்டின் தலைநகர் அங்காரா, மாலி, ஆகிய நாடுகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். தீவிரவாதத்தை எந்த நாடும் ஆதரிக்கக்கூடாது. குழுக்கள் இடையே எந்த வித பாகுபாடும் இல்லை. நாம் சமூகத்தினருடனும் நமது இளைஞர்களுடனும் பணியாற்ற வேண்டும்.தீவிரவாதத்தை மதத்தில் இருந்து தனித்து பிரிக்கும் நிகழ்வினை நான் வரவேற்கிறன், மனித மதிப்புகளை நாம் உயர்த்துவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும்.

கிழக்கு ஆசிய மாநாட்டின் கூடுகை பிராந்தியத்தின் கூட்டு எதிர்காலத்தை வடிவமைக்கும். உலக நாடுகளில் இன்னும் ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது. இந்த நிலை குறித்து இந்த மாநாட்டு அமைப்பில் உள்ள 18 உறுப்பினர் நாடுகளும் கவனிக்க வேண்டும். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பருவ நிலை மாற்ற மாநாடு நடைபெறவுள்ளது. இதில் உலக வெப்ப மயமாதலை குறைக்க விவாதிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒன்று பட்டு தெளிவான செய்தியை வெளியிட வேண்டும். ஆசியான் தலைமையிலான பாதுகாப்பு பேச்சுவார்த்தையிலும் ஒத்துழைப்பு அமைப்புகளிலும்இந்தியாவின் தீவிர பங்களிப்பு உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் சமச்சீரான, வெளிப்படையான மற்றும் வெளிப்படையான பிராந்திய கட்டமைப்புக்குநாம் சர்வதேச விதி முறைகளை வலிமைப்படுத்துதல் மற்றும் அந்த விதிகளுக்கு நாம் கூட்டாக நமது கூட்டு கடமையை தீவிரமாக மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago